ட்ரம்புக்கு நோபல் பதக்கம் வழங்கியதை நியாயப்படுத்தும் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை வழங்கியதில் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மச்சாடோ, ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்தபோது அந்தப் பதக்கத்தை வழங்கியிருந்தார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்ற அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை வெனிசுலா மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
டிரம்ப், இந்த செயலை “பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, நோபல் அமைதிப் பரிசை வழங்கும் நோர்வே குழு, அந்தப் பரிசு மாற்றத்தக்கதல்ல என்றும், அதை வேறு ஒருவருக்கு வழங்க முடியாது என்றும் விளக்கமளித்துள்ளது.




