இலங்கை

தேசிய கடன் மறுசீரமைப்பால் பாதிப்பு ஏற்படாது – செஹான் சேமசிங்க

தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது. கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறுகிறது. இதன்போது தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர் கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டத்தில் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மொத்த வெளிநாட்டு கடன்களில் 17 பில்லியன் டொலரை எதிர்வரும் ஐந்தாண்டு காலங்களுக்கு குறைத்துக் கொள்ளுமாறு பிரதான நிலை சர்வதேச கடன் வழங்குநர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஆகவே, சர்வதேச கடன்களை மறுசீரமைத்தால் மாத்திரம் பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண முடியாது என்ற காரணத்தால் தேசியகடன்களை மறுசீரமைக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படுவதால் வங்கி கட்டமைப்புக்கும்,வங்கிகளின் ஸ்திர நிலைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அத்துடன் ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆகவே கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்