இலங்கை

திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிஸார் மனு தாக்கல் – தள்ளுபடி செய்த முல்லைத்தீவு நீதிமன்றம்

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி மாங்குளம், மல்லாவி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 15 .09. 2023 அன்று பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஆனது கிழக்கு மாகாணத்தை தாண்டி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றது

இதன்போது அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலமையில் குறித்த நிகழ்வை பல்வேறு காரணங்களை காட்டி தடை செய்வதற்காக பொலிசார் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் பல்வேறு நீதிமன்றங்கள் தடை செய்ய மறுத்து வருகின்றன

இவ்வாறான பின்னணியில் கடந்த 19.09.2023 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகள் ஊடாக குறித்த ஊர்தி பவனி வருகை தருவதாக அறிந்த பொலிசார் அன்றைய தினத்தில் குறித்த நான்கு பொலிஸ் தினத்தில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்