இலங்கை

இலங்கையில் தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் – இளைஞர்கள் பலி!

ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸும் -மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக  ஆரம்ப கட்ட விசாரணையில்   தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் ஹொரவ்பொத்தானை- நெலுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பாத்ல சிஹான் (21வயது) மற்றும் பிரவீன் காவிந்த இலங்க சிங்ஹ (20வயது) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின்  சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்