செய்தி

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதலில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் : ஐ.நா

கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

“வெறும் இரண்டே மாதங்களுக்குள் லெபனானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட போதிலும், ஒரு குழப்பமான நடைமுறை வெளிப்பட்டுள்ளது.

இந்த வன்முறையை தடுக்க முடிந்தவர்களால் அவர்களின் மரணங்கள் ஏற்பட்டுள்ளன” என்று ஐ.நா. அமைப்பின் குழந்தைகள் நிறுவனமான யூனிசெஃப் (UNICEF) செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “லெபனானில் கடந்த இரண்டு மாதங்களில், ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்,” என்று கூறினார்.

இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

காசாவில் உள்ள பாலஸ்தீன குழுவான ஹமாஸ்-க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி