இராணுவ விமானம் விபத்து – ஐவர் பலி!
இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து “அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் (Jorhat) நகரில் இன்று இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் ஆன்-32 என்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.
அதேநேரம் உயிரிழந்த குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இந்தத் துயர நேரத்தில் அவர்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும்” விமானப்படை கூறியுள்ளது.
மேலும் “விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





