உலகம் செய்தி

அமெரிக்க மாநிலங்களில் வேகமாக பரவி வரும் தட்டம்மை தொற்று!

அமெரிக்காவின் தென் கரோலினாவில் தட்டம்மை பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தரவுகளுக்கு அமைய ஸ்பார்டன்பர்க் (Spartanburg) மற்றும் கிரீன்வில் (Greenville)  மாவட்டங்கள் உட்பட வடமேற்கு பிராந்தியத்தில் 111 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு முதன்மையாக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் K-12 MMR தொற்று விகிதங்கள் சுமார் 90 சதவீதம்  அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளால் நடமாடும் தடுப்பூசி கிளினிக்குகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், குறைந்த எண்ணிக்கையிலான டோஸ்கள் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்த பரவல் காரணமாக 254 நபர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது பள்ளிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் 1,912 தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி