இலங்கை செய்தி

திருமணமாகி இரண்டு மாதங்கள்! இளம் தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதியினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதிகள் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்த ஓபாதவை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிறது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி டி.எம்.ஹரீந்திர லக்மின தென்னகோன் தெரிவித்தார்.

இன்று காலை ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுது. மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்தை முந்திச் செல்லச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இரத்தினபுரி விபத்து மரண மரண விசாரணை அதிகாரி டி.எம்.ஹரீந்திர லக்மின தென்னகோனினால் நடத்தப்படவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content