ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீள ஆரம்பம்
ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வர்த்தகத் தூதர் அப்பாஸ் அப்தோல்கானி (Abbas Abdolkhani) நேற்று அறிவித்தார். தோஹாவில் உள்ள ஈரானிய தூதரகம் மற்றும் கத்தார் அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, ஈரானின் தயர் துறைமுகத்திற்கும் கத்தாரின் அல் ருவைஸ் துறைமுகத்திற்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புவியியல் ரீதியாக எதிரெதிராக அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களும் முக்கியமாக பிராந்திய வர்த்தகத்திற்கு உதவுகின்றன. போரின் போது தயர் துறைமுகம் […]



