ஐரோப்பா

லொஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட தயாரான லுஃப்தான்சா விமானம் விபத்து!

லுஃப்தான்சா நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் ஒன்று, இன்று மதியம் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.

விமான நிலையத்தின் நுழைவாயில் ஒன்றை நெருங்கியபோது அதன் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தரையில் பணிப்புரிந்தவர்களும், விமானத்தின் பணியாளர்களும் காயமடைந்த நிலையில்   மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட தயாரான குறித்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக  பயணிகள் யாரும் ஏறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!