இலங்கை

நுரைச்சோலை ஆலையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை!

நுரைச்சோலை நிலக்கரி ஆலையை இயக்க பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நவம்பர் மாதம் முதல் ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆலையில் குறைந்தபட்சம் 40 எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுவரை 34 பேர் மாத்திரமு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சிய குழுவினர் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ள நிலையில், மேலும் பத்து பேர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது ஜெனரேட்டர் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக தற்போது செயலிழந்துள்ளதுடன் நவம்பர் மாதத்தில் இருந்து வழமைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில், ஊழியர் பற்றாக்கறை பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்