இலங்கை

கந்தளாய்- புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகத்தில் எவரும் வாழக்கூடாது என கூறி குறித்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டபட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், போட்டங்காடு சந்தி , அக்ரபோதி விகாரைக்கு முன்னாள் உள்ள சிலை போன்றவற்றுடன் நான்கு சிலைகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த கண்ணாடிகளை உடைத்த சந்தேகத்தின் பேரில் கந்தளாய்,பேராறு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடை நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞர் அனைத்து மதங்களையும் பற்றி விமர்சிப்பவர் எனவும், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்