முஸ்லிம்களின் புனித பூமிக்குள் இஸ்ரேல் குடியேறிகள் அத்துமீறல் – பெரும் பதற்றம்
கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்குள், இஸ்ரேலிய காவல்துறையினரின் பாதுகாப்போடு இஸ்ரேலிய குடியேறிகள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.
இக்குடியேறிகள் மசூதியின் “முற்றங்களுக்குள் நுழைந்து சமய சடங்குகளை (Talmudic rituals) மேற்கொண்டனர்” என்று பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் Wafa தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த அல்-அக்ஸா மசூதி வளாகம் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு உயரமான பீடபூமிப் பகுதியில் அமைந்துள்ளது.
இதனை 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் சர்வதேச சமூகத்தின் பெரும்பாலான நாடுகளின் அங்கீகாரம் இன்றி, இப்பகுதியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
முஸ்லிம்களின் மூன்றாவது மிகப்புனிதமான இடமாகக் கருதப்படும் இந்த மசூதி, சர்வதேச அங்கீகாரம் பெறாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதியில் அமைந்துள்ளது.
முகம்மது நபி விண்ணுலகிற்குச் சென்ற இடமாக நம்பப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்டகாலமாகத் தொடரும் பதற்றத்தின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது.
தற்போதைய இந்த ஊடுருவல் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




