உலகம் செய்தி

ஈரானில் அசுர வேகத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் மேலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் மீது குற்றவியல் குழுக்களை அமைத்தல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் மற்றும் படுகொலை முயற்சிகளை முன்னெடுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம், இந்த நபர்கள் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, கடந்த வருடம் மாத்திரம் உலகளவில் 2,700-க்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மரணதண்டனைகளில் சுமார் 2,100 தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!