இலங்கை செய்தி

வடக்குக்கான திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு!

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (21.05.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யு.என்.டி.பி. நிறுவனம் வட மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுத்த பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதும், அவற்றின் தற்போதைய நிலைப்பாடுகள் மற்றும் அடைவுகளை ஆராய்வதுமே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இதன்போது, கடந்த காலத் திட்டங்களின் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தில் மாகாணத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் ஆளுநரின் இணைப்புச் செயலாளரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை