இலங்கை

இலங்கை அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விடுமுறை விண்ணப்பிக்க, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும், குழந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதற்காக அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு ஊதிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறை என விடுமுறைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று, அரசாங்கத்தின் நிரந்தர பெண் உத்தியோகத்தர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக 03 வேலை நாட்களுக்கான விசேட மகப்பேறு விடுமுறையையும் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்