இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நுளம்புகள் மூலம் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அனைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சரும், விசேட நிபுணருமான டொக்டர் சீதா அறம்பேபொல தெரிவித்தார்.

மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்குவைக் கட்டுப்படுத்த தனியான வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான, விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சீதா அரம்பேபொல தலைமையில் நடைபெற்ற மேல்மாகாண உபகுழுவில் அது இடம்பெற்றது.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இன்னும் சில நாட்களில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்