இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞர்கள் இருவர் கைது

நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றில் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் இருவரை கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 4 கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,முல்லைத்தீவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு நாவற்காடு பிரதேசத்திலுள்ள கூளாமுறிப்பு காட்டுப்பகுதியில் நேற்று (14.10.2023) சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தினை சுற்றிவளைத்த பொலிசார் அங்கிருந்த 760 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த 30, 32 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்