முகாம்களில் தங்கியுள்ள 7000 மக்களை 03 மாதங்களில் மீள் குடியேற்ற தீர்மானம்!
இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 7000 மக்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை புனரமைப்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 6,138 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும் கூறினார். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) […]












