உலகம்

ஆசிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப் – பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா!

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு பயணமாகவுள்ளார். இந்நிலையில் வடகொரியா இன்றைய தினம் புதிய பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுடனான அதன் உறுதியான இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்க தென் கொரியாவின் இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை வடகொரியா வெளியிடவில்லை என்பதும் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

முதன்முதலாக தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் படங்கள் வெளியாகின

  • October 22, 2025
  • 0 Comments

ஹிந்த திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் தமது குழந்தையின் முகத்தை முதன்முறையாக உலகுக்கு காட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘துவா’ எனப் பெயர் வைத்ததாக பின்னர் தெரிவித்தார்கள். பொதுவாக பிரபலங்கள் அவர்களது குழந்தைகளை வெளி உலகத்திற்கு காண்பிப்பதில்லை. பிரைவசி காரணமாக அவற்றைத் தவிர்த்து வருவார்கள். விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் இதுவரை […]

உலகம்

ட்ரம்பின் விருப்பத்தை நிராகரித்த ஈரான்: அணுசக்தி திறன்களை அமெரிக்கா அழித்ததை மறுத்த கமேனி

  • October 22, 2025
  • 0 Comments

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தை ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி(Ayatollah Ali Khomeini) நிராகரித்துள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதையும் அவர் மறுத்துள்ளார். ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி திட்டங்கள் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியன ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

லண்டனில் ஒன்றுக்கூடும் 06 பால்கன் நாடுகளின் தலைவர்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

06  பால்கன் (Balkan ) நாடுகளின் தலைவர்கள் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கவுள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக 2014 இல் தொடங்கப்பட்ட உச்சிமாநாடு  லண்டனில்  நடைபெறுகிறது. 2020 ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய போதிலும் வருடாந்த உச்சிமாநாட்டை நடத்துகிறது. இதில் கலந்துகொள்வதற்காக  அல்பேனியா (Albania), போஸ்னியா(Bosnia), கொசோவோ(Kosovo), மாண்டினீக்ரோ (Montenegro), வடக்கு மாசிடோனியா (North Macedonia) மற்றும் செர்பியா(Serbia) ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை […]

இலங்கை

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை – நால்வர் பலி!

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் சீரற்ற வானிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (22) மதியம் வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 2, 395 குடும்பங்களைச் சேர்ந்த 9, 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 422 வீடுகள் பகுதியளவு […]

உலகம்

உகாண்டாவில் (Uganda) இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 63 பேர் பலி!

  • October 22, 2025
  • 0 Comments

உகாண்டாவில் (Uganda) உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகரான கம்பாலாவிற்கும் (Kampala) வடக்கு நகரமான குலுவிற்கும் (Kullu) இடையிலான நெடுஞ்சாலையில் இரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோதலைத் தவிர்க்க முயன்றபோது ஒரு பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பல பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் 1.1 மில்லியன் ஓய்வூதியதாரர்கள்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து ஈட்டப்படும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக HMRC இன் புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. புதிய புள்ளிவிபரங்களின்படி, நடப்பு நிதியாண்டில் 66 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 1,160,000 பேர் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளனர். இது கடந்த ஆண்டு 1,090,000 ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 953,000 ஆகவும் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்த எதிர்பார்க்கப்படும் 2,640,000 பேரில் 44  […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம் – இன்று மட்டும் 20,000 ரூபாவால் வீழ்ச்சி!

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று மட்டும் தங்கத்தின் விலை 20,000 ரூபாவால் குறைந்துள்ளது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை மொத்தமாக 60,000 ரூபாவால் சரிவடைந்துள்ளது. இதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில்: ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 322,000 ரூபாவாகக் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை 379,200 ரூபாயாக பதிவாகியிருந்தது. ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை 350,000 ரூபாவாகக் குறைந்துள்ளது. இது […]

இலங்கை

வெலிகம துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

  • October 22, 2025
  • 0 Comments

” வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை ஆரம்பமாகியுள்ளது.” என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” காவல்துறை விசாரணைகளின் பிரகாரம் வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று சபையில் வெளியிடக்கூடும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். அதேவேளை, வெலிகம பிரதேச சபை தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் […]

இலங்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சஜித் எழுப்பிய கேள்வி!

  • October 22, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகரமீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயம். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘ வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர தனது அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அவர் மீது துப்பாக்கி சூடு […]

error: Content is protected !!