வாழ்வியல்

தினசரி 7,000 அடிகள் நடந்தால் போதும் – புதிய ஆய்வில் வெளியான தகவல்!

  • October 22, 2025
  • 0 Comments

நாளாந்தம் 7,000 அடிகள் நடப்பது ஆரோக்கிய நன்மைகளைப் பெற போதுமானது என்று புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் (journal Lancet Public Health) வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நம்பப்பட்ட 10,000 அடிகள் இலக்கை விட, 7,000 அடிகள் நடப்பதே நாள்பட்ட ஆறு நோய்களின் அபாயத்தையும், அகால மரண அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது என்று […]

இலங்கை

இலங்கையில் இறக்குமதி அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், இந்த விலை திருத்தங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ […]

செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பாவை அச்சுறுத்தும் போர் அபாயம் – ஜெர்மனி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

  • October 22, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் போர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயநிலைமை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு போன்று இல்லாதபோதும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்களின் பின்னணியில், இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போருக்கு தயாராக இருக்க வேண்டும். […]

உலகம்

சீனாவில் உணவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் பற்கள் – அதிர்ச்சியில் மக்கள்

  • October 22, 2025
  • 0 Comments

சீனாவில் விற்கப்பட்ட சொசேஜ் (sausage) எனப்படும் இறைச்சி உருளைகள் மற்றும் சில உணவு வகைகளில் மனிதப் பற்கள் காணப்பட்ட சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் உணவுப் பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என South China Morning Post தெரிவித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி, ஜீலின் (Jilin) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது பிள்ளைக்காக வீதியோர கடையிலிருந்து வாங்கிய இறைச்சி உருளையில் 3 செயற்கைப் பற்கள் இருந்தமை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக […]

உலகம் செய்தி

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு காத்திருக்கும் ஆபத்து

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க தொழிலாளர் சக்தியையும் பொருளாதார உற்பத்தியையும் குறைக்கக்கூடும் என அமெரிக்க கொள்கை அறக்கட்டளை நடத்திய புதிய பகுப்பாய்வு எச்சரித்துள்ளது. நிர்வாகத்தின் கொள்கைகளால் 2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க தொழிலாளர் சக்தி 6.8 மில்லியன் மக்களாலும், 2035 ஆம் ஆண்டுக்குள் 15.7 மில்லியன் மக்களாலும் குறையக்கூடும் என மதிப்பிட்டுள்ளது. அகதிகள் சேர்க்கை குறைப்பு, பயணத் […]

செய்தி விளையாட்டு

இலங்கையின் சுழற்பந்து வீச்சு சாதனையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி

  • October 21, 2025
  • 0 Comments

ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சில் வீசிய முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைத்துள்ளது. டாக்காவின் ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வரலாற்றில் முதல் முறையாக இன்னிங்ஸ் (Innings) முழுவதும் ஆல்-ஸ்பின் (All-Spin) பந்து வீச்சை தேர்ந்தெடுத்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் ஒருநாள் போட்டியில் இதற்கு முன் அதிகபட்சமாக சுழல் (Spin) பந்து வீச்சில் 44 ஓவர்களை வீசிய சாதனை […]

உலகம் செய்தி

தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் மரணம்

  • October 21, 2025
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் ஒரு கும்பல் வன்முறையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “பாதிக்கப்பட்ட இளைஞர்களை நான்கு சந்தேக நபர்கள் நடந்து வந்து அணுகினர், அவர்களில் மூன்று பேர் துப்பாக்கிகளுடன் இருந்தனர். சந்தேக நபர்கள் எதுவும் பேசாமல் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்,” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் […]

ஐரோப்பா செய்தி

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • October 21, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஸ்லோவாக்கியா (Slovakia) நீதிமன்றம் “பயங்கரவாத தாக்குதல்” குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளித்து 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பான்கா (Banská ) பைஸ்ட்ரிக்காவில் (Bystrica)உள்ள சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் 72 வயதான ஜூராஜ் சின்டுலாவை (uraj Syndula) குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தண்டனை விதித்துள்ளது. மேற்கு ஸ்லோவாக்கியாவின் லெவிஸைச் (Levice) சேர்ந்த கவிஞர் சின்டுலா, 2024ம் ஆண்டு மே 15ம் திகதி […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு தலைவர் பதவி நீக்கம்

  • October 21, 2025
  • 0 Comments

கத்தார் மீதான சமீபத்திய தாக்குதல் மற்றும் காசா நகரத்தை ஆக்கிரமிப்பதற்கான தாக்குதல் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் குறித்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹனெக்பி (Tzachi Hanegbi) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். “தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவரை நியமிக்கும் தனது விருப்பத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எனக்குத் தெரிவித்தார். இதன் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக எனது பதவிக்காலம் இன்றுடன் […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – DLS முறையில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

  • October 21, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 22வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 312 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 313 ஓட்ட இலக்கை […]

error: Content is protected !!