அறிவியல் & தொழில்நுட்பம்

சீனாவில் சத்திரசிகிச்சையின்றி மூளையின் மாற்றங்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்

  • October 22, 2025
  • 0 Comments

சீனாவில் அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் அதிநவீன MRI இமேஜிங் ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த MRI ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன MRI இமேஜிங் ஸ்கேன் கடுமையான நரம்பு நிலைகளைக் கண்காணிக்கவும் மற்றும் மன ஆரோக்கியத்தை மதிப்பிடவும் உதவும் எனக் கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அல்சைமர், பார்கின்சன் மற்றும் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் தீபாவளி கொண்டாட்டம்

  • October 22, 2025
  • 0 Comments

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு நடிகர் சிரஞ்சீவி சில நடிகர், நடிகையரை தனது வீட்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு அழைத்திருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ், நடிகை நயன்தாரா, ஆகியோர் அவரது அழைப்பை ஏற்று […]

செய்தி

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் மரணம்

  • October 22, 2025
  • 0 Comments

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை துப்பாக்கித்தாரி மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை

#Breakingnews சற்றுமுன்னர் வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

  • October 22, 2025
  • 0 Comments

வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லசந்த விக்ரமசேகர மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பரபரப்பப்படும் பொய் பிரச்சாரம்

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் மாகாணசபைத் தேர்தலைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியாகும் தகவல்களை ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார். எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், தேர்தலைக் காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலேயே, […]

உலகம்

தென்சீனக் கடல் பகுதியில் நெருக்கடி – சீனா, ஆஸ்திரேலியா இடையே தீவிரமடையும் சொற்போர்!

  • October 22, 2025
  • 0 Comments

தென்சீனக் கடல் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கிடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலியப் பாதுகாப்புப் படை அபத்தமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஆஸ்திரேலியக் கண்காணிப்பு விமானம், தமது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது என சீனா கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியது. அத்துடன், இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் கண்டித்தது. ஆனால், சர்வதேச வான் பரப்பிலேயே தாம் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் நிபந்தனையை ஏற்காத அமெரிக்கா – ட்ரம்ப், புட்டின் சந்திப்பு இரத்து

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட் நகரில் இந்த சந்திப்பு நடக்கவிருந்த நிலையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா விதித்த நிபந்தனையை ரஷ்யா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ள இரகசிய குறிப்பு ஒன்றில், டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் உரிமை ரஷ்யாவுக்கே என வழங்கப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஒப்புக் கொண்டால் […]

செய்தி

செம்மணிப் புதைகுழி – சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற தயாராகும் அரசாங்கம்

  • October 22, 2025
  • 0 Comments

செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக, சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணைக்குச் சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து மேலும் விளக்கமளித்த அமைச்சர், செம்மணிப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்குச் சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. அத்துடன், எமது நாட்டுப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட […]

இலங்கை

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தம் – பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள்!

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரையில் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் காரணமாகவே சில வகுப்புகளுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ வழங்கிய தகவலுக்கமைய, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வராத 2 முதல் 5 வரையான மற்றும் […]

கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

பூமியில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் – வெளிவரவுள்ள பல இரகசியங்கள்

  • October 22, 2025
  • 0 Comments

ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் சமகால பூமியின் ஆழமான பாறைகளில் இன்று பாதுகாக்கப்பட்டிருப்பதற்கான முதல் நேரடி ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாரிய மோதலின் பின்னர் சந்திரன் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோதலுக்கு முன்னமே ஆதிப் பூமியின் அனைத்துத் தடயங்களும் அழிந்திருக்கும் என ஆய்வாளர்கள் நம்பியிருந்தனர். எனினும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், ஆதிப் பூமியின் மூலக்கூறுகள் இன்றும் பூமியின் ஆழமான பாறைகளில் உள்ளமைக்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்கள் […]

error: Content is protected !!