செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • October 22, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தூரின் ஹோல்கர் (Holkar) மைதானத்தில் நடைபெற்ற 23வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. அணிக்காக சிறப்பாக விளையாடிய டமி பியூமாண்ட் (Tammy […]

இந்தியா செய்தி

பீகாரில் சமோசா தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் 65 வயது விவசாயியை கொன்ற பெண்

  • October 22, 2025
  • 0 Comments

பீகாரில் சமோசா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 65 வயது விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். போஜ்பூர் (Bhojpur) மாவட்டத்தில் உள்ள கௌலோதிஹரி (Kaulotihari) கிராமத்தில் வசிக்கும் சந்திரமா யாதவ் (Chandrama Yadav) என்ற நபர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். கௌலோதிஹரி கிராமத்தில் ஒரு சிறுவன் சமோசா வாங்கச் சென்றிருந்தபோது, ​​வேறு சில சிறுவர்கள் அவனை தாக்கி உணவை பிடிங்கியுள்ளனர். இது குழந்தைகள் தொடர்பான விஷயமாகக் கருதி, சந்திரமா யாதவ் சமோசா கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகை பாதுகாப்பு வாயிலில் மோதிய கார் – ஓட்டுநர் கைது

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள தடுப்பு சுவர் மீது காரை மோதிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை தெரிவித்துள்ளது. ஓட்டுநரின் அடையாளம் அல்லது விபத்திற்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. சம்பவத்திற்கு பிறகு குறித்த நபர் மனநல மதிப்பீட்டிற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரகசிய சேவை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல் மற்றும் அரசாங்க சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படும் […]

இந்தியா செய்தி

எரிபொருள் கசிவால் வாரணாசியில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

  • October 22, 2025
  • 0 Comments

கொல்கத்தாவிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ (IndiGo) விமானம், எரிபொருள் கசிவைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் (Varanasi) உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் (Bahadur Shastri International Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 166 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், “தேவையான சோதனைகளுக்காக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது, பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து […]

ஐரோப்பா செய்தி

போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஸ்வீடன் மற்றும் உக்ரைன்

  • October 22, 2025
  • 0 Comments

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 150 க்ரிபென் (Gripen) போர் விமானங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஸ்வீடன் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் (Ulf Kristersen) தெரிவித்துள்ளார். தெற்கு ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங்கில் (Linköping) பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் ஜனாதிபதி மற்றும் ஸ்வீடன் பிரதமர் கூடியிருந்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்திற்கு பிறகு JAS 39 க்ரிபென் போர் விமானம், குளோபல்ஐ (GlobalEye) கண்காணிப்பு விமானம், ஏவுகணை அமைப்புகள், டாங்க் எதிர்ப்பு காலாட்படை (anti-tank infantry) ஆயுதங்கள் மற்றும் பிற […]

பொழுதுபோக்கு

இலங்கையின் பிரபல நடிகைக்கும் கெஹல்பத்தர பத்மேவுக்கும் என்ன தொடர்பு?

  • October 22, 2025
  • 0 Comments

பாதாள உலகக் குழுக்களின் தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக  சிஐடியால் விசாரிக்கப்பட்ட பிரபல மாடலும், நடிகையுமான பியூமி ஹன்சமாலி இது குறித்து விளக்கமளித்துள்ளார். பியூமி தனது அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த அவருக்கு கூறுவதற்கு மட்டுமே தொடர்பில் இருந்ததாக கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டுபாயில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்ட புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தான் முதன்முதலில் பத்மேவை சந்தித்ததாக ஹன்சமாலி கூறினார். அவர் தனது […]

உலகம் செய்தி

துனிசியாவில் படகு மூழ்கி விபத்து – 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

  • October 22, 2025
  • 0 Comments

துனிசியா (Tunisia) கடற்கரையில் துணை-சஹாரா (sub-Sahara) ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் உயிரிழந்துள்ளனர். இது இந்த ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான கடல்சார் துயரங்களில் ஒன்றாகும் என்று துனிசியா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 70 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, கடலோர நகரமான மஹ்தியா (Mahdia) அருகே மூழ்கியதாக துனிசியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் சிறந்த வாய்ப்புகளைத் தேடும் புலம்பெயர்ந்தோருக்கு துனிசியா ஒரு […]

செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த மோசின் நக்வி(Mohsin Naqvi)

  • October 22, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் விளையாட்டை தாண்டி இரு நாட்டு அரசியல் மேலோங்கி காணப்பட்டது. காரணம் பஹல்காம் (Pahalgam attack) பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அந்தவகையில், தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. பிறகு நடந்த பரிசளிப்பு […]

பொழுதுபோக்கு

“டியூட் மீது கேஸ் போடுங்க” இளையராஜாவுக்கு நீதிமன்றம் கொடுத்த டிப்ஸ்

  • October 22, 2025
  • 0 Comments

இசைஞானி இளையராஜா என்றால் பாடல்களின் ராஜா என்று கூறுவதை விட சர்ச்சைகளின் ராஜா என்று கூறலாம். இவருடைய பாடல்கள் எந்த படத்தில் பயன்படுத்தியிருந்தாலும் படம் வெளியாகி அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிடுவார் இளையராஜா. சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தி இருப்பதாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதனால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டு அதன் பின் மாற்றங்களுடன் மீண்டும் வெளியானது. […]

இலங்கை

பிரான்சில் இருந்து 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இளைஞர்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரான்சில் (France) இருந்து சுமார் 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்த நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 28 வயதுடைய சூரன் என்ற நல்லூரைச் சேர்ந்த  இளைஞர் “பாரிஸ் டு யாழ்ப்பாணம்”(“Paris to Jaffna)  என்ற தலைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்த அவர், யாழப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் செப்டம்பர் […]

error: Content is protected !!