உலகம் செய்தி

பாகிஸ்தானில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • October 21, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் 4.7, 4.0 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

உலகம் செய்தி

மகளால் சர்ச்சையில் சிக்கிய ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி

  • October 21, 2025
  • 0 Comments

ஈரானில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 2022ம் ஆண்டு ஹிஜாப் சர்ச்சையால் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 22 வயது மாஷா அமினி (Masha Amini) என்ற பெண் உயிரிழந்தார். இது உலகளாவிய ரீதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி ஈரானில் பலநாள் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இப் போராட்டத்தின் போது பல பெண்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள காணொளி […]

உலகம் செய்தி

கை சுத்திகரிப்பான்களில் (Hand Sanitizers) பயன்படுத்தப்படும் எத்தனாலை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

  • October 21, 2025
  • 0 Comments

புற்றுநோய் அபாயங்கள் காரணமாக பல கை சுத்திகரிப்பான்களில் (Hand Sanitizers) பயன்படுத்தப்படும் மூலப்பொருளான எத்தனால் (Ethanol) குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் (ECHA) பணிக்குழு அக்டோபர் 10 அன்று எத்தனாலை ஒரு நச்சுப் பொருளாக அறிவித்தது. எத்தனால் பாவனை புற்றுநோய் மற்றும் கர்ப்ப சிக்கல்களின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பயோசிடல் (Biocidal) தயாரிப்புகள் குழு இது குறித்து முக்கிய கலந்துரையாடலுக்காக நவம்பர் 25 முதல் நவம்பர் […]

இந்தியா செய்தி

மும்பையில் 9 திருநங்கைகள் தற்கொலை முயற்சி

  • October 21, 2025
  • 0 Comments

ஆன்மீகத் தலைவர் சல்மா கான் (Salma Khan) மற்றும் கின்னர் மா சன்ஸ்தான் (Kinnar ma Sansthan) அமைப்புக்கு எதிராக சிலர் தெரிவித்த இழிவான கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் ஒன்பது திருநங்கைகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த கின்னர மா சன்ஸ்தான் அமைப்பு, இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் ஹிஜ்ரா சமூகங்களின் நல்வாழ்வுக்காக செயல்படுகிறது. மும்பையில் உள்ள அமைப்பின் அலுவலகத்தில் ஒன்பது பேரும் தற்கொலைக்கு முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் […]

உலகம் செய்தி

சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப $216 பில்லியன் தேவை – உலக வங்கி

  • October 21, 2025
  • 0 Comments

உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவின் மறுகட்டமைப்புக்கு 216 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த செலவு சிரியாவின் 2024ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் ஆகும். குடியிருப்பு கட்டிடங்களுக்கான சேதங்கள் $75 பில்லியன் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டமைப்புகளுக்கு $59 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடுமையான போர்கள் நடந்த அலெப்போ (Aleppo) மாகாணம் மற்றும் டமாஸ்கஸ் (Damascus) கிராமப்புறங்களுக்கு அதிக முதலீடு தேவைப்படும் […]

செய்தி

மகளிர் உலகக் கோப்பை – பாகிஸ்தான் அணிக்கு 312 ஓட்டங்கள் இலக்கு

  • October 21, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் 22வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. அணிக்காக சிறப்பாக விளையாடிய […]

செய்தி

பிரித்தானியாவில் உயரும் பணவீக்கம் – பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலை அதிகரிப்பு!

  • October 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 3.8 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் அதிகரிப்பானது, கடந்த மாதம் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் எதிரொலியாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் நாட்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையும் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பணவீக்கமானது வரும் மாதங்களில் கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கும் என்று  […]

உலகம்

கனடா சென்றால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு (Netanyahu) கைது செய்யப்படுவாரா?

  • October 21, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)  கனடா (Canada)  செல்லும்போது சர்வதேச குற்றவியல் சட்டங்களுக்கு அமைய அவர் கைது செய்யப்படலாம் என கனடாவின் பிரதமர்  மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கை தொடர்பில் கனடாவின் பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் கார்னி (Mark Carney)  நிச்சயமாக இதை மறுபரிசீலனை செய்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை (Netanyahu) கனடாவிற்கு வரவேற்க வேண்டும் என்று  இஸ்ரேலின் அரசாங்க […]

உலகம்

சிறையில் உள்ள இரு பிரிட்டிஷ் குடிமக்களை திருப்பி அனுப்பும் இந்தோனேசியா

  • October 21, 2025
  • 0 Comments

சிறையில் இருக்கும் பிரிட்டி‌‌ஷ் குடிமக்கள் இருவரைத் தாயகத்திற்குத் திருப்பியனுப்ப இந்தோனேசியா இணங்கியுள்ளது. அதற்கான உடன்பாட்டில் ஜகார்த்தாவும்(Jakarta) லண்டனும் இன்று (21) கையெழுத்திட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட லின்சே சேண்டிஃபோர்டும்(Lindsay Sandiford) அவர்களில் ஒருவர் என்று இந்தோனேசியாவின் மூத்த சட்ட, மனித உரிமை அமைச்சர் யுஸ்ரில் இஹ்ஸா மகேந்திரா(Yusril Ihsa Mahendra) கூறினார். கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க லின்சே சேண்டிஃபோர்டுக்கு போதைப்பொருள் கடத்தலுக்காக 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தோனீசியாவின் பாலி தீவில் மரண […]

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டும் ‘டியூட்’ – அதிகாரப்பூர்வ வசூல் விபரம்

  • October 21, 2025
  • 0 Comments

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ மூலம் நடிகராக மாறி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதன் பின், ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்திருந்த அவர், தற்போது பல படங்களை வரிசையில் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவருடைய புதிய படமான டியூட் படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகியாகவும், சரத் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்கள் […]

error: Content is protected !!