விளையாட்டு

RCB, Lucknow இன்று மோதல்!

  • April 15, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (15) நடைபெறும் 23 வது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bangalore மற்றும் Lucknow Super Giants ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 […]

இந்தியா உலகம் செய்தி

ட்ரம்ப், மோடி 40 நிமிடங்கள் மந்திராலோசனை!

  • April 15, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 நிமிடங்கள்வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மேற்காசிய போர் குறித்தும், ஹார்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பிலும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேற்படி நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி தொடர்பில் உள்ளார். இஸ்லாமாபாத் […]

இலங்கை

240 ஈரானியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறினர்!

  • April 15, 2026
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (15) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து […]

இலங்கை

மர்மமான முறையில் கிடந்த என்புக்கூடு!

  • April 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித என்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள பற்றைக் காணி ஒன்றில் என்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த என்புக் கூடு, சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் உயிரிழந்தவர் தொடர்பில் […]

விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது CSK

  • April 14, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 22 ஆவது  போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. போட்டியின் நாணயசுற்சியில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது. சென்னை அணி சார்ப்பில் சஞ்சு சாம்சன் 32 பந்துகளுக்கு 48 […]

உலகம் செய்தி

லெபனானுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததை உறுதிப்படுத்திய இஸ்ரேல்

  • April 14, 2026
  • 0 Comments

லெபனான் மற்றும் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வொஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல், லெபனான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது முடிவடைந்துள்ளன. பேச்சுவார்த்தைகளின் முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள், எல்லை பாதுகாப்பு, ஆயுதக் குழுக்களின் செயல்பாடு மற்றும் பிராந்திய பதற்றத்தை குறைப்பது போன்ற முக்கிய விடயங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில், குறிப்பாக ஹிஸ்புல்லா தொடர்பான பாதுகாப்பு அச்சங்கள் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா அதிரடி முற்றுகை – முதல் 24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் தாண்டவில்லை 

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் கடுமையான முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்ததாவது, முதல் 24 மணி நேரத்தில் அமெரிக்கா விதித்த முற்றுகையை எந்தக் கப்பலும் கடந்து செல்லவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஒரு டஜன் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுடன், 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாலுமிகள், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழங்கிய உத்தரவின் […]

உலகம் செய்தி

எல்லையில் மீண்டும் போர் பதற்றம் – ஹிஸ்புல்லா 13 இஸ்ரேல் குடியிருப்புகளை ஏவுகணையால் தாக்கியது

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல்–லெபனான் எல்லைப் பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள 13 குடியிருப்புகளை ஏவுகணைகளால் தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் நிற்கும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேவேளை, அமெரிக்காவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஹிஸ்புல்லா தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், […]

உலகம் செய்தி

இரண்டு நாளில் திருப்புமுனை? அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் அதிரடி தகவல்!

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு நாட்களில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்ல அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். இந்த அறிவிப்பு, இஸ்லாமாபாத் நகரில் வார இறுதியில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், […]

இலங்கை செய்தி

வெப்பமான வானிலை தொடர்பில் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை

  • April 14, 2026
  • 0 Comments

வெப்பமான வானிலை தொடர்பில் நாளைய தினம் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகல மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் பல பகுதிகளில் ஆபத்தான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் வெளிப்புறச் செயற்பாடுகளை தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். […]

error: Content is protected !!