உலகம் செய்தி

இரண்டு நாளில் திருப்புமுனை? அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் அதிரடி தகவல்!

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு நாட்களில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்ல அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

இந்த அறிவிப்பு, இஸ்லாமாபாத் நகரில் வார இறுதியில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் வெளியாகியுள்ளது.

அந்த சந்திப்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் எந்த ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தெஹ்ரான் மற்றும் பாகிஸ்தான் இடையே தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனினும், அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியான ஒப்பந்தம் எதுவும் இல்லை என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!