இலங்கை செய்தி

சூட்சுமமாக உடலில் போதைப்பொருளை மறைத்த பெண் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது

  • April 12, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து , கட்டார் நாட்டின் தோஹாவை வந்தடைந்து, பின்னர் கட்டாரிலிருந்து இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக […]

செய்தி தமிழ்நாடு

வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் – கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம்

  • April 12, 2026
  • 0 Comments

தனது ஆட்சியில் தமிழ்நாடு ஏஐ டிஜிட்டல் தலைநகராக மாறும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும் என தெரிவித்த விஜய் இலஞ்சம் இன்றி ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் சென்றடையும் எனவும் கூறினார். அரசின் திட்டங்களைப் பெற தன் அடையாள அட்டை தரப்படும் என்றும் 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை […]

இலங்கை செய்தி

நிலக்கரி பிரச்சினைகள் கட்டணப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை – PUCSL

  • April 12, 2026
  • 0 Comments

மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தின் போது, நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது வேறு ஏதேனும் நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்கால மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளிலிருந்தும் நிலக்கரி நெருக்கடி […]

இலங்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி – 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

  • April 12, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடல் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, விசைப்படகொன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகை தந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், இவர்கள் யாழ்ப்பாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் […]

இந்தியா பொழுதுபோக்கு

இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

  • April 12, 2026
  • 0 Comments

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle) தனது 92ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 12,000 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி உலகப் புகழ்பெற்ற ஆஷா போஸ்லே, இந்திய இசைத்துறையின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.  

விளையாட்டு

IPL இல் பங்கேற்க தயாராகும் மதீஷ பத்திரண

  • April 12, 2026
  • 0 Comments

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார். அதன்படி, இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் நோக்கில் அவர் மிக விரைவில் இந்தியா புறப்படவுள்ளார். இதற்கமைய, அவர் இந்த ஆண்டு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

சீனாவின் முன்மொழிவு “நச்சு மாத்திரை” – தைவான் அரசு கொதிப்பு

  • April 12, 2026
  • 0 Comments

தைவான் Taiwan எதிர்க்கட்சித் தலைவரின் Cheng Li-wun, பீஜிங் பயணத்தைத் தொடர்ந்து, தைவானுக்காக 10 புதிய சலுகைகளை சீனா முன்மொழிந்துள்ளது. சுற்றுலாத் தளர்வுகள், ஊடகப் பரிமாற்றங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனைக்கான வசதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. “சுதந்திர தைவான் எதிர்ப்பு” உட்பட அரசியல் நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையிலேயே மேற்படி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. சீனாவின் இந்த முன்மொழியை “நச்சு மாத்திரை” என தைவானின் ஆளுங்கட்சி விமர்சித்துள்ளது. எனினும், எதிர்க்கட்சியான குவோமின்டாங் சீனாவின் திட்டத்தை வரவேற்றுள்ளது. […]

செய்தி

இந்தோனேசியா பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

  • April 12, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரின் Anis Matta இலங்கை பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் 23 ஆம் திகதி அவர் கொழும்பு வரவுள்ளார். 24 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் அவரை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் Anis Matta பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி Mohamed Muizzu எதிர்வரும் மே 4 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியது ஈரான் தூதுக்குழு!

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்தது. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் கடந்த 8 ஆம் திகதி இருவாரகால போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான அமைதி பேச்சு […]

இலங்கை செய்தி

இலங்கை விஜயத்தின்போத வடக்கு, கிழக்கு செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 12, 2026
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரு நாள் பயணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களைப் பார்வையிடவுள்ளார். முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் […]

error: Content is protected !!