பொழுதுபோக்கு

அதிரும் சரிகமப மேடை: திணரும் நடுவர்கள்!

  • April 24, 2026
  • 0 Comments

ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த வாரம் One On One சுற்று நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதவுள்ளனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிரடியாக பாடிடுவது ப்ரோமோவில் காண்பிக்கப்படுகின்றது. பேய் மாதிரி பாடுவதாக நடுவர் ஸ்ரீனிவாஸ் கூறுகின்றார் . அது மட்டும் இல்லை இவர்களின் அதிரடியான திறமையை பார்த்து யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழம்பத்தில் இருப்பதாக நடுவர் சரண் குறிப்பிடுகின்றார். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த […]

உலகம் செய்தி

ஈரான் ஆபத்தான நாடாக மாறக்கூடும்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் Kaja Kallas வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு இல்லாமல் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் முந்தைய 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுசக்தி விவகாரங்களுடன் சேர்த்து ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் நிழல் யுத்த நடவடிக்கைகள் போன்ற பிராந்தியப் பாதுகாப்பு […]

இலங்கை

​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

  • April 24, 2026
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் […]

பொழுதுபோக்கு

படத்தின் கதை மாற்றப்பட்டதால் விலகினார் நயன்தாரா!

  • April 24, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா, பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், முதலில் தொடங்கவிருந்த வரலாற்று படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், படத்தின் கதையினை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள். தற்போது புதிய கதை முடிவாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு படங்களில் நடித்து வருவதாலும், கதை மாற்றத்தாலும் பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகும் […]

இலங்கை

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் – குற்றவாளிக்கு வலைவீச்சு!

  • April 24, 2026
  • 0 Comments

பாலங்கொடவின் பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்லேவெல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இந்தப் பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலங்கொட பிரதம நீதிபதி, நீதித்துறை மருத்துவ கண்காணிப்பாளர், குற்ற நிகழ்வு விசாரணை அதிகாரிகள் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் நேற்று (23) பிற்பகல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு […]

உலகம் செய்தி

உள்நாட்டு விமான சேவையை நாளை ஆரம்பிக்கிறது ஈரான்!

  • April 24, 2026
  • 0 Comments

  ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் முக்கிய நகரமான மஷ்ஹத் இடையிலான விமானப் போக்குவரத்து நாளை (25) சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. நாட்டின் வான்வழிப் பாதையை படிப்படியாகத் திறக்கும் அரசாங்கத்தின் நான்கு கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஏப்ரல் 18 முதல் ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிய நிலையில், முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. புனிதத் தலங்களைக் கொண்டுள்ள […]

செய்தி

விடுதலைக்காக ஒலித்த குரல்களுக்கு நன்றி: கடத்தப்பட்ட ஊடகர் உருக்கம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்க சுயாதீன ஊடகவியலாளர் Shelly Kittleson , தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக நன்றி தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற மிலிஷியா குழுவினராலேயே இவர் கடத்தி செல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னை மீட்பதற்காகப் பாடுபட்ட அரச அதிகாரிகள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக அமைப்புகள் மற்றும் நண்பர்களின் தீவிர முயற்சியால் தனது விடுதலை சாத்தியமானதாக Shelly Kittleson குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

உலக அமைதிக்கான நடை பயணத்தில் பிரதமர் பங்கேற்பு!

  • April 24, 2026
  • 0 Comments

உலக அமைதியை வலியுறுத்தி “அமைதிக்கான நடைபயணம்” எனும் மகுடத்தின் கீழ் அமெரிக்காவில் 110 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், தற்போது இலங்கையில் தமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர். தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராமய வரை முன்னெடுக்கப்படும் இந்த அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு, இன்று (ஏப்ரல் 24) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமானது. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஸ்ரீ […]

இந்தியா செய்தி

இந்திய வான் வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் மே 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதையடுத்து ஏப்ரல் 30-ம் திகதி முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல தமது வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாகிஸ்தானும் தடை விதித்திருந்தது. இவ்வாறு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பாலியல் மோசடி : ஆண்களுக்கு வலைவீசும் கும்பல்!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 20 வயதுகளில் உள்ள ஆண்கள் எளிதில் பாலியல் மோசடிகளுக்குள் சிக்கிக்கொள்வதாக புதிய பகுப்பாய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. பாலியல் மிரட்டல் என்பது, குற்றவாளிகள் ஒரு வெகுமதியை, பொதுவாக பணத்தை, வழங்காவிட்டால் தனிப்பட்ட பாலியல் படங்கள், வீடியோக்கள் அல்லது முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மிரட்டி பணம் பறிக்கும் செயற்பாடாகும். சுமார் 50 வழக்குகளை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இருபது வயதுகளில் இருப்பதும், பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக இவ்வாறான […]

error: Content is protected !!