திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்!
இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் நம்பகமான தரப்பாக நடித்து, தவறான தகவல்களை அளித்து குறித்த பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பணத்தை மீட்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மக்கள் மத்தியில் […]













