அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்பாடு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • June 7, 2026
  • 0 Comments

சொல்லிசைப் பாடகர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சந்திவெளி ‘எக்கோ’ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர், கடந்த காலங்களில் பயங்கரவாதத் […]

செய்தி விளையாட்டு

SL vs WI: மழை காரணமாக போட்டி ரத்து!

  • June 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும், […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் 376 ட்ரோன்களை அழித்த ரஷ்ய வான் படை!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரதான நகரங்களில் ஒன்றான St Petersburg மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முக்கிய எண்ணெய் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , 376 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள Leningrad பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார். […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியா செய்த மாபெரும் தவறு : 10 வருடம் கழித்து அதிருப்தி!

  • June 6, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பிரித்தானியா எடுத்த முடிவை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள்  பிரெக்ஸிட்டை பெரிய ஏமாற்றமாகக் கருதுகின்றனர். அத்துடன் இது பயனற்றது எனவும் விமர்சித்துள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதே,  குடியேற்றம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பிரெக்ஸிட்டிற்குப் பிறகு பிரிட்டன் தனது இறையாண்மையையும் உலகளாவிய செல்வாக்கையும் மீண்டும் பெறும் என்ற […]

ஐரோப்பா

பொருளாதாரத்தை முடக்க திட்டம் : செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் முக்கிய இடங்களில் உக்ரைன் தாக்குதல்!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற டாவோஸ் பொருளாதார  மாநாட்டின் இறுதி நாளில் உக்ரைன் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் துருப்புகள் அப்பகுதியில்  ஆளில்லா விமானங்கள் மூலம் ஒரு கடற்படைத் தளம் மற்றும் ரஷ்ய ஆயுதக் கிடங்குகளைத் தாக்கியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி  உறுதிப்படுத்தியுள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றியுள்ள லெனின்கிராட் பகுதிக்கு மேல் 140 இற்கும்  மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ (Aleksandr Drozdenko)  கூறினார். […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் செயலுக்கு ஈரான் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

லெபனான் ராணுவத்தினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இஸ்ரேல் வேண்டுமென்றே லெபனானின் இறைமையையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்Esmaeil Baghaei பகாவி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல் லெபனானின் அமைதி மற்றும் செழிப்பிற்கு எதிரான ஒரு தெளிவான ஆக்கிரமிப்புச் செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் லெபனான் அரசுக்கும் ஈரான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இலங்கை

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

  • June 6, 2026
  • 0 Comments

நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 25 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக  தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக  நுரைச்சோலை  போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம்

இதுவரை இல்லாத தொற்று பரவலாக மாறும் எபோலா : WHO எச்சரிக்கை!

  • June 6, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா பரவல், இதுவரை இல்லாத மிகப்பெரிய பரவல்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிராந்தியம் முழுவதும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே இந்த நெருக்கடியை  சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு […]

உலகம் செய்தி

மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் வன்முறை: பாலஸ்தீனம் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள ஹுவாரா Huwara நகரில் இஸ்ரேலிய குடியேறிகளால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதலில் பல குடியிருப்பாளர்கள் காயமடைந்ததுடன், நகராட்சி கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்போடு இந்த அத்துமீறல்கள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டும் பாலஸ்தீனம், இது மக்களைத் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சி என்று குறிப்பிடுகிறது. காசா போரின் பின்னணியில் இத்தகைய ராணுவ மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் […]

இலங்கை

லொறியொன்று மரம் மீது மோதி விபத்து -12 பேர் படுகாயம்!!

  • June 6, 2026
  • 0 Comments

ஆனமடுவ பகுதியில் சரக்கு லொறியொன்று மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னருவவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முனேஸ்வரம் கோவிலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அந்த வாகனத்தில் 13 பேர் பயணம் செய்த நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பொலன்னருவவின் அரலகன்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை லொறி  […]