இலங்கை செய்தி

யாழிலிருந்து மலையகத்துக்கு யாத்திரை!

  • April 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்த யாத்திரையில், சுமார் 60 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், சிவபெருமானின் திருவுருவச் சிலையை வாகன ஊர்தியில் தாங்கியவாறு யாத்திரிகர்கள் தமது பயணத்தைத் தொடங்கினர். இன்று மாலை நகர் வலமாக வருகை […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்துக்கு பயணம் – போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரும் குழப்பம்

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த தகவல் குறித்து ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவோரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் “போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள்” குறித்து […]

இலங்கை செய்தி

காணி விடுவிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டியில் போராட்டம்

  • April 24, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைக்கு சுமுக தீர்வை காண வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, மயிலிட்டி பிரச்சினையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தீர்க்கப்படும்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி , காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து மக்கள் […]

உலகம் செய்தி

லெபனானில் காயமடைந்த இந்தோனேசிய அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 24, 2026
  • 0 Comments

லெபனானில் பணியாற்றி வந்த  யூனிஃபில் அமைதிப்படையில் சேர்ந்த இந்தோனேசிய வீரர் ஒருவர், கடந்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யூனிஃபில் வெளியிட்ட தகவலின்படி, Riko Pramudia என்ற கார்ப்பரல் (Corporal), மார்ச் 29ஆம் திகதி இரவு அட்சித் அல் குசைர் பகுதியில் உள்ள தளத்தில் ஏற்பட்ட எறிபொருள் வெடிப்பில் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளை கடைப்பிடித்து, ஐ.நா. பணியாளர்கள் […]

ஐரோப்பா செய்தி

நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க அழுத்தம்? பென்டகன் மின்னஞ்சல் சர்ச்சை

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகனிலிருந்து வெளியானதாகக் கூறப்படும் ஒரு உள் மின்னஞ்சல், தனது நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நட்பு நாடுகளை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமையைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவுகள் மீது அர்ஜென்டினாவும் உரிமைக் கோரிக்கை வைத்துள்ளது. […]

செய்தி தமிழ்நாடு

தேர்தலில்‌ மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்‌- அன்புமணி அறிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

திமுக ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர், திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பேச்சு வார்த்தையால் முடங்கிய பாகிஸ்தான் – பொருள் தட்டுப்பாடு, மக்கள் பெரும் சிரமம்

  • April 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் முக்கிய  வீதிகள் ஆறாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த நகரம் தயாராகி வருவதாக கூறப்பட்டாலும், இரு தரப்பினரும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. வீதிகள் மூடப்பட்டதால் கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட புதிய விளைபொருட்களின் விநியோகம் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை!

  • April 24, 2026
  • 0 Comments

திருகோணமலை – மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது. குறித்த இடத்துக்கு இன்று (24) விஜயம் மேற்கொண்ட முதல்வர் க.செல்வாஜா உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி மாற்றிடத்தை வழங்கினர். திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி பகுதியில் முன்னெடுக்கப்படும் நடைபாதை வியாபாரத்தில் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையிலேயே அங்கு நடைபாதை வியாபாரத்தை […]

இலங்கை செய்தி

அம்பியூலன்ஸ் சாரதியின் கவயீனத்தினால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்?

  • April 24, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸின் சாரதி அதனை மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார் என தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹதிவுல்வெவ – தெவனிபியவ இந்ராராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன தேரரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மஹதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த சுரங்க திஸாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலையில் […]

இந்தியா

இது வெறும் தொடக்கம் மட்டுமே: விஜய் அதிரடி பதிவு

  • April 24, 2026
  • 0 Comments

தமிழக தேர்தலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்று முன்னர் அவர் தன் முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் […]

error: Content is protected !!