முன்னாள் பிரதமர் தக்சின் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் : தாய்லாந்து நீதிமன்றம்
தாய்லாந்து உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் பெருஞ் செல்வந்தருமான தக்சின் ஷினவாத் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. தாய்லாந்து அரசியல் களத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிய தக்சின் குடும்பத்திற்குத் தற்போது அடுத்தடுத்து அடி விழுந்துள்ளது.தீர்ப்பு அறிவிக்கப்படும்போது தக்சின் நீதிமன்றத்தில் இருந்தார். அவரை விரைவில் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார்கள் என்று கூறப்பட்டது. சில நாள்களுக்கு முன்புதான் தக்சினின் மகள் பெடோங்டார்ன் ஷினவாத் தாய்லாந்துப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பெடோங்டார்ன், கம்போடியாவுடனான […]













