இலங்கை

ரஷ்யாவில் உயர் கல்வி – இலங்கை மாணவர்களை ஏமாற்றியவருக்கு நேர்ந்த கதி

ரஷ்யாவில் உயர் கல்வி பெற்று தருவதாக கூறி மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்து சென்று அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றி மோசடி செய்த சந்தேக நபர் தொடர்பில் நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக மாத்தறை தலைமையக பொலிஸில் 17 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், நாரஹேன்பிட்டி பொலிஸில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி வாதுவ, அம்பாறை, மொரட்டுவ பொலிஸாரிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சந்தேகநபர் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தீவுப்பகுதிக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்