மத்திய கிழக்கு

கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 7 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது தொடர்கதையாக உள்ளது.

இந்தநிலையில் கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.