இலங்கை

முல்லைத்தீவில் இளைஞன் ஒருவரிடமிருந்து கஞ்சா மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (25) அதிகாலை 1கிலோ 570கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இரணைப்பாலை பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது அவரது வீட்டு அறையில் பொதி செய்யப்பட்ட வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கிலோ 570கிராம் கேரளா கஞ்சாவினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 27வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் இவருக்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றது, எங்கிருந்து கொண்டுவந்தார் போன்றவாறாக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்