இலங்கை

ஐந்து வருடத்தில் 17 பில்லியன் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி!

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் ஐந்து வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக,  ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி மொத்த வெளிநாட்டு கடன்களான 41.5 பில்லியன் டொலர்களில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் உள்ளுர் கடன்களை மறுசீரமைப்பதால் நாட்டின் வங்கி முறையில் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு வங்கி அமைப்பில் உள்ள வைப்புத்தொகையை பாதிக்காது என்றும் தற்போது செலுத்தப்படும் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டியை பாதிக்காது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

அதேபோல்  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF), மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதி (ETF), ஆகியவையும், ஓய்வூதியமும் பாதிக்கப்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்