செய்தி

கருக்கலைப்பு செய்யாதீர்கள் – மக்களிடம் போப் பிரான்சிஸ் கோரிக்கை

Pope Francis is flanked by Vatican Head Master of Ceremonies, Bishop Diego Giovanni Ravelli, right, and Master of Ceremonies, Bishop Krysztof Marcjanowicz as he presides over a mass in St. Peter’s Basilica at The Vatican on New Year’s Day, Wednesday, Jan. 1, 2025. (AP Photo/Andrew Medichini)

கருக்கலைப்பு செய்யாதீர்கள் என உலக மக்களிடம் போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருக்கலைப்பை நிராகரிக்க வேண்டும், கருத்தரித்தல் முதல் இயற்கை மரணம் வரை உயிரை பாதுகாக்கவும் மதிக்கவும் வேண்டுமென புத்தாண்டு செய்தியாக போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

புத்தாண்டு தினமான நேற்று ரோமின் வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

இயேசுவின் தாயார் மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புத்தாண்டு தினத்தை போப் பிரான்சிஸ் கொண்டாடினார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில்,

“ஒரு பெண்ணால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பராமரிக்க வேண்டும். கருவில் உள்ள வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை, துன்பப்படுபவர்களின் வாழ்க்கை, ஏழைகள், முதியவர்கள், தனிமையில் இருப்பவர்கள், இறப்பவர்கள் என வாழ்க்கையின் ஒவ்வொரு விலைமதிப்பற்ற பரிசையும் பாதுகாக்க அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். கருவுற்றல் முதல் இயற்கை மரணம் வரை வாழ்வின் கண்ணியத்தை மதிக்க உறுதியான அர்ப்பணிப்பை வேண்டுகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கையை போற்றவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் பார்க்க முடியும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி