செய்தி தமிழ்நாடு

இந்த தேர்தலோடு திமுக காற்றோடு பறக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் அடுத்துள்ள வண்ணாங்கோயிலில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக, எஸ்டிபிஐ புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 40வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, வாக்கு சேகரித்தார்.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அதிமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், மாநிலத் தலைவருமான நெல்லை முபாராக் அலி பேசுகையில்

மோடியா அல்லது லேடியா என கேட்டார் ஜெயலலிதா. அதே போல் மோடியா அல்லது எடப்பாடியா என்பது தற்போது உள்ளது.

தங்களது கட்சியில் சமூக நீதி இருக்கிறது என பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் உங்கள் வேட்பாளர்களில் ஒரு சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் இருந்தால் கூறுங்கள். தமிழகத்தில் ஆட்டுகுட்டிகளுக்கு இடமில்லை.

திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலில் அகற்றும் வகையில் நடைபெறும் இந்த பாராளுமன்ற தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்.

தமிழக கோட்டை மட்டுமல்ல டெல்லி கோட்டையில் கூட அதிமுகவை அசைக்க ஆள் இல்லை பி.ஜே.பிக்கு அடிமை நாங்கள் இல்லை.
ஜூன் 4ம் தேதி தமிழகத்தை ஆளும் திமுகவிற்கும், டெல்லி அரசுக்கும் முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும்.

தொடர்ந்து பேசிய பிரேமலாதா விஜயகாந்த் என்னை அழைக்கும் போது தேர்தல் பொதுக்கூட்டம் என சொன்னார்கள். ஆனால் இங்கு மாபெரும் வெற்றி மாநாடு எ போல் உள்ளது.

திருச்சி என்றாலே திருப்பு முனையை ஏற்படுத்தும் இடம் தான். இதே திருச்சியில் மகளிர் மாநாடு நடத்திய போது மலைக்கோட்டை தே.மு.க.திவினர் மஞ்சள் கோட்டையாக மாற்றினர்.

புரட்சி தலைவர் – புரட்சி தலைவி – புரட்சி கலைஞர் மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. மூன்று பேரும் திரைத்துறையில் இருந்து மக்களுக்குகாக சேவை செய்ய வந்தார்கள். மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ரவுடிசத்தை உருவாக்கி தலை குனிவை ஏற்படுத்தி வருகிறது.

2021ல் எடப்பாடி அண்ணன் வெற்றி பெற்று இருந்தால் தமிழகம் சிறப்பாக இருந்து இருக்கும். மீண்டும் சட்ட பேரவை தேர்தலில் அதிமுக – தே.மு.தி.க கூட்டணி 2026ல் வெற்றி பெறும்.

எடப்பாடி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், அவர்கள் மரியாதை மிக்கவர்கள், அவர்கள் அமைச்சர்களும் அப்படித்தான் மரியாதை மிக்கவர்கள் . நியாயத்திற்கும், தர்மத்திற்கும் தான் நாங்கள் எப்போதும் துணை நிற்போம்

திமுக என்ன உரிமைகளை மீட்டெடுத்து இருக்கிறோம் என்கின்றனர் என தெரியவில்லை. திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் கஞ்சா கடத்தும் ரவுடிகளா உள்ளனர்.

ஒரு பழமொழி சொல்வார்கள் யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளேவை என்பது தான் ஸ்டாலின் கதை. கஞ்சா கடத்தும் திமுக ரவுடிகளை சிறையில் அடைக்க தயாரா இன்ஸ்டால் இடம் கேட்கிறேன்இன்ஸ்டால் இடம் கேட்கிறேன்.

எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக – ராஜினாமா செய்து விட்டு … மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள்.

முதலில் எல்லா பெண்களுக்கும் 1000 ரூபாய் என்று சொன்னார். இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்கிறார். தமிழக மக்களும்
தகுதி வாய்ந்த முதல்வரா என்று நாங்கள் கேட்கிறோம்.

பெண்களுக்கு 1லட்சம் சேர வேண்டிய இடத்தில் வருடம் 12ஆயிரம் கொடுத்துவிட்டு மீதி 88அயிரம் கஜனாவிற்கு திமுக கொண்டு செல்கிறது. பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொல்கிறீர்கள். ஏன் தங்கத்தின் விலையை குறைக்கிறேன் என்று சொல்லுங்க பார்போம்.

நன்கொடை என்கிற பெயரில் 662 கோடி இலவசமாக பெற்ற திமுகவை கண்டிக்கின்றோம். இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்றவர்கள் பா.ஜ.க, தமிழகத்தில் அதிகம் நன்கொடை பெற்றவர்கள் திமுகவினர். அவர்கள் அப்பா காலத்தில் இருந்தே விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள்.

2026க்கு பின்னர் திமுக தமிழகத்தில் இல்லை என்கிற நிலைமை உருவாக்குவோம் என பேசினார்.

தொடர்ந்து தமிழக சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் – அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசுகையில்பேசுகையில் தேர்தலில் போட்டி என்றால் திமுகவிற்கும், பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை நாடு அறியும்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டங்களில் பிரதமரை பற்றியும், என்னை பற்றியும் தான் பேசுவார். சரக்கு இருந்தால் தானே பேசுவார் – அவர் ஒரு பொம்மை முதலமைச்சர் தானே உங்கள் குடும்பத்தினரிடம் இருந்த தமிழகம் தப்பித்தது. நல்ல வேளை எம்.ஜி.ஆர் பிறந்தார் தமிழகத்தில்.

அவள் ஒரு மருத்துவக் கல்லூரிகளையும், எண்ணற்ற கல்லூரிகளை கொண்டு வந்து தமிழகத்தை சிறந்த கல்வி மாநிலமாக மாற்றியுள்ளோம். ஆனால், உதயநிதி ஒரே செங்கலை எடுத்து மூன்று வருடமாக காட்டி கொண்டு உள்ளார். செங்கலை ரோட்டில் காட்டி என்ன பயன் – நாடாளுமன்றத்தில் காட்டுங்கள். அதற்கு திறானியும், தெம்பு இல்லை.

34நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து ஒன்னும் செய்யவில்லை. தமிழக மக்கள் புரியாதவர்கள் இல்லை. அறிவாளிகள்.

நீட் யார் ஆட்சியில் கொண்டு வந்தது யார்?மைக்கை நான் பிடிக்கிறேன். வா நான் பேச தயார் – நீட்டை கொண்டு வந்த போது மத்தியில் காங்கிரஸ் கட்சி. ஏழை எளிய மாணவர்கள் ஏன் மருத்துவ கல்லூரியில் படிக்க கூடாது என் நினைத்து 7.5 % அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் உள் ஒதுக்கீடு நாங்கள் கொண்டு வந்தோம்.

வெற்று அறிவிப்பு மூலம் மக்களை ஏமாற்ற கூடாது.எடப்பாடி என்ன கொண்டு வந்தார் என மத்தியில் உள்ளவர்கள் கேள்வி கேட்கிறார்.

மெட்ரோ, காவிரி – தடுப்பனை என எத்தனையோ நல்ல, நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

முதலமைச்சர் நானும் டெல்டாகாரன் என மேட்டூரை திறந்தார். இதை நம்பி 5.5 லட்சம் ஏக்கர் விவசாயிகள் ந நாட்டு நாட்டினார்கள், ஆனால் 3.5 லட்சம் வீணாகி, கருகி போய்விட்டது.

கர்நாடகவிடம் டெல்டாவை காப்பாற்ற கேட்டு இருக்கலாம் ஆனால் நீங்கள் கேட்க வில்லை.

பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்தீர்களா – கண்டிப்பாக இல்லை – அதிமுக ஆட்சியில் ஒரு ஹெக்டருக்கு 84ஆயிரம் வாங்கி கொடுத்தோம். நீங்கள் பயிற்காப்பீட்டில் சேர்க்கவே இல்லை. மக்களை பற்றி யோசிக்கவே இல்லை.

இவர்களுக்கு எண்ணம் எல்லாம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பதவி வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளை பெறுவோம்.

திகார் ஜெயில் ரெடியாக இருக்கிறது – 2ஜி ஸ்பெக்ரம் ஊழலை தூசி தட்டு எடுத்து வருகின்றனர்.

திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி செயலாளர் வெளி நாட்டிற்கு போதை கடத்தி வந்த நபர். நான் கேட்கிறேன் எந்த கட்சியில் ஆவது அயலக அணி என்று உண்டா?

2138 பேர் கஞ்சா விற்பனை தொடர்பாக கண்டுபிடிக்கபட்டதாக ஸ்டாலினே அவை குறிப்பில் கூறி உள்ளார் – ஆனால் 138 பேர் தான் கைது என்கிறார். அப்படி என்றால் மீதி எல்லாம் திமுக காரர்களா. சைலேந்திரபாபு என ஒருவர் இருந்தார்.கஞ்சா ஆப்ரேசன் ஓ.2 ஓ.3 என்று கடைசியாக ஓ போட்டுவிட்டு போய் விட்டார்.

நான் நினைத்து இருந்தால் 4ஆண்டுகளில் உங்கள் அமைச்சர்கள் எத்தனையோ பேர் மீது வழக்கு போட்டு இருப்பேன். ஆனால் பொறுமையாக இருக்கிறேன். உங்கள் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் பயந்தவர்கள் அல்ல நாங்கள்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திமுகவிற்கு மரண அடியாக இருக்க வேண்டும். தேர்தலோடு திமுக என்கிற கட்சி காற்றோடு பறக்க வேண்டும் என பேசினார்.

அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் காரணமாக திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு 500க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த கட்சியினர் எழுந்து புறப்பட்டனர். இதன் காரணமாக அங்கு போடப்பட்டிருந்த சேர்கள் காலியாக காட்சியாக காலியாக காட்சியளித்தது.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content