இலங்கை செய்தி

வாக்களிப்பு நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கியால் சுட உத்தரவு

வாக்களிப்பு நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கியால் சுடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றியம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தவே பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு தினத்தன்று நாட்டின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட பணிக்கு மேலதிகமாக முப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்புக்காக 60,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிப்பாய்கள் குழுவொன்றும் ஈடுபடுத்தப்படவுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை