இலங்கை செய்தி

இலங்கை அரச அதிகாரிகளுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் கையொப்பம்!

இலங்கை அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அலுவலகப் பணிகளை எளிதானதாகவும், வினைத்திறனானதாகவும் மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்குக் கொண்டு செல்வதுதான் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.

மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொதுச் சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை