உலகம்

பகையாளிகளின் வான் மண்டலத்திற்கு அருகில் போர் பயிற்சியில் ஈடுபட்ட சீனா, ரஷ்யா!

சீனாவும், ரஷ்யாவும் ஜப்பான் மற்றும் தென் கொரியா அருகே கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் Tu-95  அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் சீனாவின்  H-6 குண்டுவீச்சு விமானங்கள்,  இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இது  தேசிய பாதுகாப்பு குறித்த கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஏழு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் அதன் வான்வெளியை மீறவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் தென் கொரியாவின் வான் மண்டலத்தில் சீனாவின் போர் விமானங்கள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தென்கொரியா தங்களுடைய போர் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஜப்பானிய விமானங்களை ரேடார் மூலம் குறிவைத்து சீன ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டோக்கியோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்