செய்தி

கொழும்பில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து வர்த்தகர் உயிரிழப்பு

கொழும்பு 7 – ரோஸ்மிட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் இன்று (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவுக்கான மருந்தை உட்கொண்டதாகக் கூறப்படும் இவர் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருதுவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி