ஐரோப்பா

பாலஸ்தீன மக்களுக்கு ரூ.101 கோடி நிதியுதவியை அறிவித்துள்ள பிரிட்டன்!

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு சுமார் 101.4 கோடி ரூபாய் நிதியுதவியை பிரிட்டன் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 11 நாட்களாக தொடர்ந்துள்ள நிலையில் இதுவரை பாலஸ்தீனியர்கள் 2,215 பேர் பலியாகியுள்ளதுடன் 8,714 படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் அவதிக்குள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு பல நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு பிரித்தானியா 10 மில்லியன் டொலர் தொகையை வழங்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், ”ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களையோ அல்லது அவர்கள் விரும்பும் எதிர்காலத்தையோ பிரதிபலிக்கவில்லை.

ஹமாஸ் அமைப்பினரால் பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று கூடுதலான 10 மில்லியன் டொலர் ஆதரவுடன் பாலஸ்தீனிய மக்களுக்கான பிரிட்டனின் உதவியை மூன்றில் ஒரு பங்காக அதிகரிப்பதாக அறிவிக்கிறேன்” என ரிஷி சுனக் பதிவிட்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்