இலங்கை

கொழும்பில் குடியிருப்பு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சீன நாட்டவரின் சடலம்!

தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து விழுந்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரின் சடலம்   பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி செய்தியின்படி, தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நாட்டில் தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று இந்த வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்ததாகவும், குறித்த நபர் மேல் மாடியில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் தற்போது கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்