இலங்கை

காலியில் வாடகைக்கு வீடு எடுத்து ‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட பெலாரஸ் நாட்டவர் கைது

அக்மீமன(Akmeemana) பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் ‘குஷ்’கஞ்சா பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் கஞ்சா பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் அந்த செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினர் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக 1.5 இலட்சம் ரூபாவை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்