ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை மட்டுப்படுத்தியது Qantas!

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ் (Qantas) தனது விமானச் சேவைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் செலவு சுமார் 800 மில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணங்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டு சர்வதேச வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துவிட்டு, அதிக தேவையுள்ள பாரிஸ் மற்றும் ரோம் போன்ற நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

போதிய வருவாய் இல்லாத காரணத்தால் சில சிறிய நகரங்களுக்கான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படுவதோடு, எரிபொருள் விலை ஏற்றத்தைச் சமாளிக்க பயணக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், தனது பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய அந்நிறுவனம் தொடர்ந்து அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி