இலங்கை செய்தி

அதிரடிப் படை அதிகாரிகள் மீது தாக்குதல் – பெண் உள்ளிட்ட மூவர் கைது

ரம்புக்கனை – திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபரை கைது செய்யச் சென்ற போதே நாரம்பெத்த பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளை இருவர் குறித்த அதிகாரிகளை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் இருவரும் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரையும் மேலும் இருவரையும் ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை