இலங்கை

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் படுதோல்வி – இலங்கை அணிக்கு எதிராக முறைப்பாடு

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான புரவெசி பலய அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியை காட்டிக்கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதுவே, இதுவரை இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி அல்லது வேறு எந்த அணியும் பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்