இலங்கை

அனுராதபுரத்தில் யானை தாக்கியதால் பலியான குடும்ப பெண்!

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் மர முந்திரிகை நாட்டப்பட்டிருந்த நிலையில் அக்காணியை பார்வையிடுவதற்காக இன்று (23) காலை சென்றபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு உயிரிழந்த பெண் ஹொரவ்பொத்தான – பரங்கயாவாடிய- நபடவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான கே. சரோஜா (49) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யானையின் தாக்குதலினால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை ஹொரவ்பொத்தான திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.சீ.சுபஹான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இருந்தபோதிலும் காட்டு யானைகளின் தொல்லையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு அஞ்சுவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

காட்டு யானைகளின் தொல்லை குறித்து வன ஜீவராசிகள் திணைக்கலை உத்தியோகத்தர்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பகுதியிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்