இலங்கை

இலங்கையில் மற்றுமொரு தாயையும், ஒன்ரறை வயது பெண் குழந்தையும் மாயம்!

அங்குருவாதோட்ட பகுதியில் தாயும், சேயும் காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மற்றுமொரு தாயும், சிறுமி ஒருவரும் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.  இது தொடர்பில் ஹகுரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹகுரன்கெட்ட ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும்  8 மாதமும் கொண்ட  பெண் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் தாயார் கடந்த  (20) திகதி இருவரும் காணாமல் போயுள்ளதாக ஹகுரன்கெத்த  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபரும் அவரது சிறிய மகளும் காணாமல் போன தினத்தன்று லங்காம பேரூந்து ஒன்றில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்